அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்
இடைப்பாடி: சங்ககிரியில், அ.தி.மு.க.,வின் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோ-சனை கூட்டம் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., சுந்தரராஜன் தலைமை வகித்தார். அதில், முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:கடந்த, 3 ஆண்டுகளில், தி.மு.க.,வினர் ஏதாவது திட்டம் கொண்டு வந்துள்ளனரா? தி.மு.க., ஆட்சியில் மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும், 6 சதவீதம் உயர்த்-தப்பட உள்ளது. மகளிருக்கு, 1,000 ரூபாய் தருவதாக கூறி-னார்கள். அதை கூட, அ.தி.மு.க., போராட்டம் நடத்திய பின் தான் வழங்கினர். எங்கள் ஆட்சியில் ஜூனிலேயே பொங்கலுக்குரிய இலவச வேட்டி, சேலை ஆர்டர் கொடுக்கப்படும். தி.மு.க., ஆட்சியில் ஒருவருக்கு கூட ஆர்டர் கொடுக்கப்படவில்லை. இன்னும் இரு மாதங்களில், 1.65 கோடி வேட்டி, சேலைகள் தயாரிக்க முடி-யுமா? பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைத்தறிகள் வேலை-யின்றி எடைக்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. தொழிலாளிகள் முதல் முதலாளிகள் வரை பாதிக்கப்பட்டுள்-ளனர். மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால்தான் நாம் நிம்ம-தியாக தொழில் செய்ய முடியும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலர் ரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.