உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்துக்கடைகளை அகற்றுங்க அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்

சந்துக்கடைகளை அகற்றுங்க அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்

ஆத்துார், அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில், ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகளை சேர்ந்த, ஒன்றிய, நகர செயலர்கள் உள்ளிட்டோர், நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம் அளித்த மனு:ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகளில் மதுபாட்டில் விற்பனை செய்யும் சந்துக்கடைகள் அதிகரித்துள்ளதால், பெண்கள், மாணவியர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. குடியிருப்பு, பிரதான சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். தலைவாசல் தெற்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் அழகுவேல், வீ.ராமநாதபுரத்தில், மாரியம்மன் கோவில் நிலமான, 3.90 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டுமனைகளாக பிரித்து விற்க முயற்சிப்பதால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'காழ்ப்புணர்ச்சி'இதுகுறித்து, ஒன்றிய செயலர் அழகுவேல் கூறுகையில், ''வீ.ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு, வீட்டு மனை விவகாரத்தில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியில், என் பெயரை களங்கப்படுத்த புகார் கூறியுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை