ஏ.கே.வி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
நாமக்கல், மே 9நாமக்கல், சூரியகவுண்டபாளையத்தில் உள்ள, ஏ.கே.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 2024 - -25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். நந்தகுமார், 588, வைதீஸ்வரன், 577, பிரனவ்குமார், 575 மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கணினி அறிவியலில், 3 மாணவர்கள், கணினி பயன்பாட்டியலில், -2 பேர், கணக்குப்பதிவியல், வணிகவியலில் தலா ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய, 87 பேரில், 550- மதிப்பெண்களுக்கு மேல், 16 பேர், 500க்கு மேல், 41 பேர் பெற்றுள்ளனர். இவர்களை, பள்ளி தாளாளர் முத்துசாமி, தலைவர் ஆறுமுகம், செயலர் குழந்தைவேலு, பொருளாளர் பழனிசாமி, இயக்குனர்கள் குழந்தைவேல், சீனிவாசன், பள்ளி முதல்வர் இளமுருகன், ஆசிரியர்கள் அனைவரும், இனிப்புகள் வழங்கி பாராட்டினர். மேலும் இப்பள்ளியில் பிளஸ் 1 பாடப்பிரிவுக்கு, போர்டு பிளஸ் நீட்(இண்டகிரேட்டட்) மற்றும் 'ரீப்பீட்டர்ஸ் நீட்' பயிற்சி வகுப்புக்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடக்கிறது என, பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.