தனியாக இருந்த மூதாட்டி கொலை நகை, பணம் திருட்டு: எஸ்.பி., ஆய்வு
ஓமலுார்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை, பணம் திருடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, கஞ்சநாயக்கன்-பட்டி அருகே, கோவிந்தகவுண்டனுார் பெருமாள் மலை அடிவா-ரப்பகுதியில் குடியிருந்து வந்தவர் குமரி, 60. இவரது கணவர் இருசாகவுண்டர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பும், மகன் மணி-கண்டன், 10 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்ட நிலையில், மூதாட்டி குமரி மட்டும், தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.அவ்வப்போது, 100 நாள் திட்டப்பணி வேலைக்கு சென்று வந்-துள்ளார். கடந்த, 21 காலை, 100 மீட்டர் துாரத்தில் உள்ள மற்றொ-ருவர் வீட்டுக்கு சென்று, 'டிவி' பார்த்து விட்டு வீட்டுக்கு சென்ற மூதாட்டி வெளியே வரவில்லை. சந்தேகமடைந்து அருகில் வசிப்-பவர்கள் பார்த்த போது, முகம் சிதைந்த நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். தீவட்டிப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சேலம் எஸ்.பி.,கவுதம்கோயல் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார்.அப்போது மூதாட்டியின் காதில் இருந்த தோடு, மூக்குத்தியை காணவில்லை. அதன் பட்டன் கீழே கிடந்துள்ளது. வீட்டில் ரொக்க பணம், 10 ஆயிரம் ரூபாய் காணவில்லை என, உறவி-னர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில்' காட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து, நகை, பணம் திருடி சென்றுள்ளனர். கொலையை மறைக்க, மூதாட்டி உடல் மீது ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் முழு விபரம் தெரியவரும்,' என்றனர்.