உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆடு அடிக்கும் தொட்டியில் அங்கன்வாடி

ஆடு அடிக்கும் தொட்டியில் அங்கன்வாடி

ஓமலுார்: ஓமலுாரில் ஆடு அடிக்கும் தொட்டியில் அங்கன்வாடி மையம் செயல்படும் அவலம் உள்ளது.ஓமலுார் டவுன் பஞ்சாயத்து, 12வது வார்டு காமராஜர் பூங்கா வளாகம் அருகே ஓமலுார் அங்கன்வாடி மைய கட்டடம் உள்ளது.அது, 1982ல் கட்டப்பட்டதால் மேற்கூரை சேதமாகி, மழை காலங்களில் தண்ணீர் கசிந்தது. அங்கு, 25 சிறுவர், சிறுமியர் உள்ள நிலையில் சிறு கட்டடம் என்பதால் இடநெருக்கடியும் இருந்தது. இதனால் புது கட்டடம் கேட்டு அங்கன்வாடி ஆசி-ரியை மல்லிகா, டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார். வாடகைக்கு வேறு இடம் கிடைக்காத நிலையில், கடந்த ஜூலையில் டவுன் பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டு, பயன்பாடின்றி கிடந்த ஆடு அடிக்கும் தொட்டி கட்டடத்தின் ஒரு பகுதியில் அங்கன்வாடி செயல்பட இடம் ஒதுக்கப்பட்டது.தற்போது அங்கு இரு மாதங்களாக சிறுவர், சிறுமியர் உள்ளனர். மேலும், 3 மாதங்களுக்குள் புது கட்டடம் கட்டப்படும் என அதி-காரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் பழைய ஓடு வேயப்-பட்ட அங்கன்வாடி கட்டடம் அப் படியே உள்ளது. அங்கு எந்த பணியும் தொடங்கப்பட-வில்லை. இதுகுறித்து ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி-யிடம் கேட்டபோது, ''இந்த கட்டடத்தை தரமாட்டோம் என தெரிவித்தோம். அங்கன்வாடி ஆசிரியை, பரவாயில்லை என கேட்டு இடத்தை பெற்றார். புது அங்கன்வாடி கட்டட நிதி ஒதுக்க கோரி ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளோம். அது வந்ததும் பணி தொடங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி