உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம்திரளான பக்தர்கள் தரிசனம்சேலம், நவ. 15-சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷக வைபவம் நேற்று நடந்தது. காலையில் சிவ பெருமானுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்து அர்ச்சனை நடந்தது. பின் மங்கல வாத்தியம் இசைக்க சிவனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.அதேபோல் மாலை, 5:30 மணிக்கு மூலவர் சிவனுக்கு, சாதம் செய்யப்பட்டு பின் அபிஷேகம் நடந்தது. சாதத்தில் லிங்கம் வடிவமைக்கப்பட்டு பூஜை, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவும் லிங்கத்துக்கு பூஜை செய்து சிவாச்சாரியார், வேதங்கள் முழங்க அன்ன லிங்கத்தை கோவில் உட்பிரகாரத்தில் வலம் வரச்செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் அன்ன லிங்கம் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் அன்ன லிங்கத்துக்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி கரைக்கப்பட்டது. பின் மூலவருக்கு அபிேஷகம் செய்த அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று எங்கே?அதேபோல் சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அன்னாபிேஷக விழா இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்ட லிங்கத்துக்கு இரண்டாம் முறையாக இன்று மாலை, 5:00 மணிக்கு அன்னாபிேஷகம் நடக்கிறது. ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாதேஸ்வரன், சென்னகிரி, இருசனம்பட்டியில் உள்ள மருந்தீசர் கோவிலில்களிலும் இன்று அன்னா பிேஷகம் நடக்கிறது.300 கிலோ அரிசிஆத்துார் வசிஷ்ட நதிக்கரை தென்பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பாறை மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வசிஷ்ட முனிவர் வழிபாடு செய்துள்ளார். அங்கு அன்னாபிஷேக விழாவையொட்டி நேற்று, 50 கிலோ அரிசியில் சமைத்த சாதம், தக்காளி, கத்தரிக்காய் உள்பட, 27 வகை காய்கறி, பழங்களுடன் கைலாசநாதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 300 கிலோ அரிசியில் சமைத்த சாதங்கள், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. அப்போது குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள், வறுமையின்றி வாழ்ந்திடுதல் என வேண்டி, ஏராளமானோர், கைலாசநாதருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை, பிரசாதமாக பெற்று சாப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ