மேலும் செய்திகள்
ஊராட்சியில் வெற்றி ஊர்வலம் பா.ஜ.,வினர் ஆலோசனை
17-May-2025
பனமரத்துப்பட்டி, பா.ஜ., கட்சியின், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா, அக்கட்சியினர் சார்பில், நேற்று பனமரத்துப்பட்டியில் கொண்டாடப்பட்டது. கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா தலைமை வகித்து, அரசு பள்ளிகளை சேர்ந்த, 200 குழந்தைகளுக்கு புத்தக பை வழங்கினார். ஒன்றிய முன்னாள் பொதுச்செயலர் தமிழ்நேசன், பள்ளி குழந்தைகளுக்கு நோட், புக், பேனா, கேக் ஆகியவற்றை வழங்கினார். நகர தலைவர் ஆதிராஜா, மண்டல பிரதிநிதி மோகன்ராஜ் ஆகியோர், 41 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினர்.மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் சின்னுராஜ், ஒன்றிய பொதுச்செயலர் ராஜசேகர், பெரியசாமி ஆகியோர், 500 பேருக்கு வெஜ் பிரியாணி வழங்கினர். மேலும் மதுரையில் நடக்க உள்ள முருகர் மாநாட்டில் பங்கேற்க, மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். மாவட்ட பொதுச்செயலர் கந்தசாமி, ஒன்றிய செயலர்கள் விஷ்ணுகுமார், விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-May-2025