உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

சேலம்:சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜரானார்.சேலம், பெரியார் பல்கலையில் பட்டியல் இனத்தவருக்கு வழங்க வேண்டிய நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியை, பொதுப்பிரிவினருக்கு வழங்கி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதுகுறித்து, பல்கலை பேராசிரியர்கள், பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில், துணைவேந்தர் ஜெகநாதன், காலை, 11:30 மணிக்கு ஆஜரானார். அவரிடம், 2 மணி நேரம் போலீசார் பல கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை