சிறையில் சமையல் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம்: சங்ககிரி கிளை சிறையில் சமையல் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத்(பொ) அறிக்கை:சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி கிளை சிறையில் காலியாக உள்ள சமையல் பணியை நிரப்ப, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள் இன சுழற்சியில் நிரப்பப்பட உள்ளது. 2024 ஜூலை, 1ல் அதிகபட்ச வயது வரம்பு, எஸ்.சி.ஏ., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 37 வயது, எம்.பி.சி., பி.சி., பிரிவினருக்கு, 34 வயது, ஓ.சி., பிரிவினருக்கு, 32 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள், ஜாதிச்சான்று நகலுடன் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம், வரும், 5க்குள் கிடைக்கும்படி, அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். நேர்முகத்தேர்வு நாள் உள்ளிட்ட விபரங்கள், தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு நேரடியாக அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.