மேலும் செய்திகள்
போலீஸ் உதவி கமிஷனர்கள் மாற்றம்
31-Jan-2025
சேலம்: சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்தவர் சரவணன், இவர் பதவி உயர்வு பெற்று, கள்ளக்குறிச்சி சென்றுள்ளார். அதன் பின் உதவி கமிஷனராக (பொறுப்பு) ஸ்ரீராம-சந்திரன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றினார். இதற்கு முன், சேலம் டவுன் உதவி கமிஷனராக பணியாற்றியுள்ளார். இவர், இன்று நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பேற்கிறார்.
31-Jan-2025