உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராணுவ ஹெலிகாப்டர் சேலத்தில் தரை இறக்கம்

ராணுவ ஹெலிகாப்டர் சேலத்தில் தரை இறக்கம்

ஓமலுார், சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு பயணியர் விமானம் இயக்கப்படுகிறது. தினமும், 300க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.அங்கு நேற்று மதியம், 1:45 மணிக்கு, இந்திய விமான படைக்கு சொந்தமான சிறு ரக ஹெலிகாப்டர், அவசரமாக தரை இறங்கியது. அந்த ஹெலிகாப்டர் புதிதாக விமானம் நிறுத்துவதற்கு கட்டப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது. உடனே தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால்,எங்கிருந்து வந்தது, எதற்காக தரையிறக்கப்பட்டது என்ற விபரத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ