உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செயற்கை நீர்வீழ்ச்சி கட்டும் பணி நிறுத்தம்

செயற்கை நீர்வீழ்ச்சி கட்டும் பணி நிறுத்தம்

சேலம், சேலம் தொங்கும் பூங்கா அருகே, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில், நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக கான்கிரீட் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் சிலை இடது புறம், பாலத்தின் கடைசி பகுதியில், நெடுஞ்சாலை துறை இன்ஜினியர் கூறியதாக, சில நாட்களாக, ஒப்பந்ததாரர், செயற்கை நீர்வீழ்ச்சி கட்டும் பணியை மேற்கொண்டார்.அங்கு, த.மா.கா., சேலம் மாவட்ட தலைவர் உலகநம்பி, நேற்று பார்வையிட்டு, 'இந்த இடத்தில் நீர்வீழ்ச்சி அனுமதியின்றி கட்டப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்' என கூறி பணியை நிறுத்த முயன்றார். இதை அறிந்து அங்கு சென்ற அஸ்தம்பட்டி போலீசார், 'முறையாக புகார் அளிக்க வேண்டும்' என்றனர். அதற்கு உலகநம்பி, 'உரிய அனுமதி பெற்று பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதனால் கட்டுமான பணியை தற்காலிகமாக நிறுத்தும்படி, போலீசார் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ