ஆத்துார் டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ஆத்துார், ஆத்துார் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சதீஷ்குமார், கடந்த ஆகஸ்டில் இடமாற்றப்பட்டார். இதனால் சேலம் குற்றப்பிரிவு டி.எஸ்.பி., செல்வம், ஆத்துாரை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி டி.எஸ்.பி., சத்யராஜ், ஆத்துாருக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.