உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டராக உயர்த்தணும் ஜன., 6, 7ல் தமிழகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதலை 50 லட்சம் லிட்டராக உயர்த்தணும் ஜன., 6, 7ல் தமிழகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: ''ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை, 50 லட்சம் லிட்டராக உயர்த்த வலியுறுத்தி, ஜன., 6, 7ல் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு பால் உற்-பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமதுஅலி கூறினார்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக்குழு கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் முகமதுஅலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பெருமாள், பொருளாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, மாநில தலைவர் முகமதுஅலி கூறியதாவது: தமிழகம் முழுவதும், 15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். அதன் மூலம், ஒரு நாளைக்கு, 2.50 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்-யப்படுகிறது. அதில், 35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது. மொத்த உற்பத்தியில், 12 - 13 சதவீதம் மட்டுமே கூட்டுறவு அமைப்புகள் கொள்முதல் செய்கின்றன. மற்ற அனைத்தும், தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்-றன. ஆவின் நிர்வாகத்தில் பல மட்டங்களில், ஊழலும், ஊதாரித்-தனமும் தொடர்கிறது. பால் கொள்முதலை அதிகப் படுத்த வேண்டும்.முதல் கட்டமாக சத்துணவில், பாலை சேர்க்க வேண்டும். இதன் மூலம், கூடுதலாக, 10 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்-முதல் செய்ய முடியும்.தமிழக அரசியலில், ஆட்சியில், அதிகாரத்தில் உள்ள பலருக்கும், தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்பு இருக்கிறது என்று அச்-சப்படுகிறோம். அதில், நிர்வாகத்திலும், பங்குதாரர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியில் உள்ளவர்கள், அமைச்சர்கள், அவர்களின் உறவி-னர்கள், தனியார் நிறுவனங் களுடன் கூட்டில் உள்ளனர். அதனால், தனியார் நிறுவனங்களை பாதுகாப்பதே இவர்களின் மறைமுகமான திட்டமாக இருக்கிறது. அதனால் தான், ஆவினில் பால் கொள்முதலை உயர்த்தவில்லை. முதல் கட்டமாக, பால் கொள்முதலை, 50 லட்சம் லிட்டராக அதிகப்படுத்த வேண்டும். தமிழகத்தில், 60 ஆண்டுகளாக மக்களின் உழைப்பின் பயனாக, ஆவினுக்கு நல்ல பெயர் உள்ளது. அவற்றை, அரசு காப்பாற்ற வேண்டும். கொள்முதல் விலையில், 10 ரூபாய் உயர்த்தி, பசும்பால் லிட்டருக்கு, 45 ரூபாய், எருமை பால், 54 ரூபாய்க்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் தொடர் மழை காரணமாக, கால்-நடைகளுக்கு அம்மை நோய் தாக்கி உள்ளது. தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவின் விற்பனை முகவர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி, வரும் ஜன., 6, 7ல், தமிழகம் முழுவதும் கறவை மாடுக-ளுடன் ஆரம்ப சங்கங்கள், ஆவின் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை