மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய ஆதரவு திரட்ட அயலக அணி முடிவு
சேலம், சேலத்தில், தி.மு.க., அயலக அணி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தன தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு, உலக தமிழர்கள் சார்பில் அயலக அணி இரங்கல், அஞ்சலி செலுத்துகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க வாக்காளர்களை ஒன்றிணைக்கும் முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை வரவேற்பது; மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க, சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட வேண்டும்.செப்டம்பரில் நடக்க உள்ள கட்சி முப்பெரும் விழாவை, சிறப்பாக நடத்த, அயலக அணி துணை நிற்பது; தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிறந்தநாளை நவ., 27ல், மனித நேய உதய நாளாக கொண்டாடுவது; சமக்ர சிஷா திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்கு கல்வி நிதியை விடுவிக்காமல், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன உள்பட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.