உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம்

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம்

சேலம், சாலையோர வியாபாரிகளுக்கு, வங்கிக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம், சேலம் மாநகராட்சியில் நடந்து வருகிறது.சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பி.எம்.ஸ்வாநிதி லோக் கல்யாண் மேளாஸ் திட்டத்தின் கீழ், சேலம் மாநகராட்சியில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இதில், சாலையோர வியாபாரிகளுக்கு, ரூ.15 ஆயிரம், 25 ஆயிரம், 50 ஆயிரம் வரை வங்கிக்கடன் பெறலாம். இதுவரை வங்கி கடன் கிடைக்காத வியாபாரிகள், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வாயிலாக விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சேலம் மாநகராட்சி மைய அலுவலகம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகங்களில், அக்., 2 வரை நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகள் பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை