உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அடிப்படை வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

அடிப்படை வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

பனமரத்துப்பட்டி, சேலம் உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராம அடிப்படை வேளாண் தொழில்நுட்ப பயிற்சி நிலவாரப்பட்டியில் நேற்று நடந்தது. 'அட்மா' குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் நிறைமதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா ஆகியோர், உழவர் பயிற்சி நிலைய செயல்பாடு, வேளாண் திட்டங்கள், மானிய விபரம் குறித்து பேசினர்.சேலம் விதை சான்று அளிப்பு துறை வேளாண் அலுவலர் தீபாபிரியதர்ஷினி, விதைப்பண்ணை அமைத்தல், மானியம், அங்கக சான்று பெறுதல்; வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கலைவாணி, மானியத்தில் பண்ணை கருவிகள் பெறுதல், பண்ணை கருவிகளின் வாடகை விபரம்; வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் சுதிர், சந்தை நிலவரம்; சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுனர் ரவி, நோய் மேலாண்மை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினர். ஏற்பாடுகளை, பனமரத்துப்பட்டி அட்மா திட்ட அலுவலர்கள் சுமித்ரா, ரேணுகா செய்திருந்தனர். நிலவாரப்பட்டியை சேர்ந்த, 50 விவசாயிகள் பயன் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ