உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெ.தி.க., பிரமுகர் கொலை வழக்கு சேலம் கோர்ட்டில் எம்.எல்.ஏ., ஆஜர்

பெ.தி.க., பிரமுகர் கொலை வழக்கு சேலம் கோர்ட்டில் எம்.எல்.ஏ., ஆஜர்

சேலம், நவ. 9-கிருஷ்ணகிரியில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக இருந்தவர் பழனி. இவர், 2012 ஜூலை, 5ல் துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டித்தும் கொலை செய்யப்பட்டார். வேப்பனஹள்ளி போலீசார், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் இலகுமையா உள்பட, 22 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது.சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருந்ததால் வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற, பழனியின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதில் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு, வழக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தற்போதும் தளி எம்.எல்.ஏ.,வாக உள்ள, இ.கம்யூ., கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட, 22 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பழனியின் மகன் வாஞ்சிநாதன் சாட்சியளித்தார். மீண்டும் வழக்கு விசாரணையை வரும், 21க்கு நீதிபதி சுமதி ஒத்திவைத்தார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ