உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர்: மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

பைக்கில் மதுக்கடைக்கு வந்த பீர்: மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

கெங்கவல்லி,கெங்கவல்லி, ஆணையாம்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு கடந்த, 18ல், கடை மேற்பார்வையாளர் ராஜேந்திரன், 52, அவரது பைக்கில் இருந்து, 50 பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடைக்குள் வைத்தார். இதைப்பார்த்த சிலர், கடையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக டாஸ்மாக் அலுவலர்கள், போலீசார் விசாரணை செய்தனர். இந்நிலையில் மேற்பார்வையாளர் ராஜேந்திரன், விற்பனையாளர் பெரியசாமியை, 'சஸ்பெண்ட்' செய்து, சேலம் மாவட்ட மேலாளர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.6 பேர் ஆஜராக உத்தரவுதலைவாசல், வேப்பம்பூண்டி பிரிவு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர் மகேஸ்வரன், மதுபாட்டில் விற்ற பணத்தை எண்ணும்போது, சில ரூபாய் நோட்டுகளை, அவரது பேன்ட், சட்டை பாக்கெட்டுகளில் போடுவது போன்ற வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் டாஸ்மாக் அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'வீடியோ குறித்து அங்கு பணிபுரியும், 3 மேற்பார்வையாளர், 3 விற்பனையாளர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை