பெங்களூரு - துாத்துக்குடி சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்: பொங்கல் விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க, பெங்களூரு - துாத்துக்குடி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த ரயில், வரும், 10 இரவு, 10:00 மணிக்கு புறப்பட்டு பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி வழியே மறுநாள் காலை, 11:00 மணிக்கு துாத்துக்குடி அடையும்.ஆனால் மறுமார்க்கத்தில், துாத்துக்குடி - மைசூரு ரயிலாக இயக்கப்படும். அந்த ரயில், 11, மதியம் 1:00 மணிக்கு கிளம்பி, பெங்களூரு வழியே அடுத்தநாள் காலை, 6:30 மணிக்கு மைசூருவை அடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.