உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாரத சாரணர் இயக்க மாவட்ட அலுவலகம் திறப்பு

பாரத சாரணர் இயக்க மாவட்ட அலுவலகம் திறப்பு

ஆத்துார், ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பாரத சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட மாவட்ட அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார். தொடர்ந்து, சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த ராபர்ட்பேடன் பவுல் படத்தை, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் திறந்து வைத்து, சாரணர் இயக்க செயல்பாடு குறித்து பேசினார். ஆத்துார் சாரண மாவட்ட தலைவர் ராமசாமி, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, டி.எஸ்.பி., சதீஷ்குமார், சாரண, சாரணியர் மாவட்ட ஆணையர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ