மேலும் செய்திகள்
'மோடி பொங்கல்' விழா
12-Jan-2026
ஓமலுார்: கருப்பூரில், பா.ஜ., கிழக்கு ஒன்றிய கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கருப்பூரில், பா.ஜ., ஓமலுார் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா ஒன்றிய தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின், கருப்பூரில் மாற்று கட்சியிலிருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இணையும் விழா நடந்தது. அவர்களுக்கு ஹரிராமன் கட்சித்துண்டு அணிவித்து வரவேற்றார். பின்னர், வரவுள்ள சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
12-Jan-2026