உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிம்ஸ் செல்லம் மருத்துவமனையில் ரத்த தான முகாம்

சிம்ஸ் செல்லம் மருத்துவமனையில் ரத்த தான முகாம்

சேலம், உலக ரத்த தான தினத்தையொட்டி, சேலம் சிம்ஸ் செல்லம் மருத்துவமனை வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.மருத்துவமனை மேலாண் இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை, சேலம் கே.எஸ்.எம்., ரத்த வங்கி மருத்துவ அலுவலர் வெங்கடேசன், மருத்துவமனை பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.முகாமில் சிம்ஸ் செல்லம் மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள், சேலம் இந்திய மருத்துவ சங்க தலைவர் மோகனசுந்தரம், செயலர் விஷ்ணுபிரசாத், சேலம் மெட் வெர்ஸ் சங்க உறுப்பினர்கள், ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி