உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொதிகலன் குழாய் பழுது மின் உற்பத்தி நிறுத்தம்

கொதிகலன் குழாய் பழுது மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர்: கொதிகலன் குழாய் பழுதால் மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் ஒரே அலகில், 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணி நடக்கிறது. பணிகள் முடிந்து மீண்டும் மின் உற்பத்தி துவங்கும்.அதுபோல ஒரு அலகில், 210 வீதம், 4 அலகில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பழைய மின் நிலையத்தில் கடந்த, 12ல், 1 மற்றும், 4வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மீண்டும் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, 1வது அலகில் மின் உற்பத்தி துவங்கியது. தற்போது மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில், 1,2,3 ஆகிய மூன்று அலகில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 4வது அலகில், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் தேவையை பொறுத்து மீண்டும் உற்பத்தி துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ