உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

ஆத்துார்:ஆத்துார், தாண்டவராயபுரத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி பிரசாந்த், 34. இவரது, மகன் கிருத்திக், 5. தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம், வீடு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கிருந்த, தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவனை தேடி வந்து பார்த்த பிரசாந்த், அதிர்ச்சி அடைந்தார். உடனே மகனை மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியில் சிறுவன் உயிரிழந்தான். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை