உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதிக்கு கஞ்சா கொண்டு வந்த தம்பி கைது

கைதிக்கு கஞ்சா கொண்டு வந்த தம்பி கைது

சேலம்: ஒடிசாவை சேர்ந்தவர் ஷிரோத் மாலிக், 34. இவரை, கடந்த, 21ல், சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்ததால், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சந்-தித்து துணிமணிகள் கொடுக்க, அவரது தம்பி காளிச்சந்திரன் மாலிக் உள்-ளிட்ட உறவினர்கள், 3 பேர், நேற்று முன்தினம், சேலம் மத்திய சிறையில் மனு அளித்தனர். அப்போது அவர்களது உடைமை-களை போலீசார் பரிசோதித்தனர். அதில் காளிச்சந்திரன் மாலிக் கொண்டுவந்த பைக்குள் இருந்த பேன்ட்டில், 10 கிராம் கஞ்சா இருந்ததால், பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஜெயிலர் சிவா-னந்தம் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, காளிச்சந்-திரன் மாலிக்கை கைது செய்தனர்.2 பேர் சிக்கினர்சேலம், அன்னதானப்பட்டி போலீசார், நேற்று அகரம் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சபரீஷ், 23, ஹரீஷ், 20, ஆகியோர், 'டியூக்' பைக்கில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை