மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொந்தரவு தொழிலாளி கைது
19-Sep-2024
தலைவாசல்: சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திவிட்டு அண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம் தலைவாசல், மும்முடியை சேர்ந்தவர் கிருபாநாத், 18. இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவரது, 17 வயதுடைய தம்பி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், தனியார் பள்ளியில் அண்ணன் படிப்பது தொடர்பாக கேட்க, அவர்கள் இடையே அடிக்கடி பிரச்னை எழுந்தது. அதேபோல் நேற்று மாலை, 5:30 மணிக்கு பிரச்னை ஏற்பட, ஆத்திரமடைந்த கிருபாநாத், கத்தியால் தம்பியின் தொண்டையில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்ததை பார்த்த கிருபாநாத், வீட்டில் துாக்கிட்டுக்கொண்டார். இருவரையும் உறவினர்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கிருபாநாத், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த தம்பி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2024