உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சை ஓட்டியபடி பணம் எண்ணிய டிரைவர் சஸ்பெண்ட்

பஸ்சை ஓட்டியபடி பணம் எண்ணிய டிரைவர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்துகழகம், ஜான்சன்பேட்டை, 2வது கிளையை சேர்ந்த கண்டக்டர் இல்லாத பஸ், நேற்று முன்-தினம் மாலை, 6.55 மணிக்கு, கோவையில் இருந்து சேலம் புறப்-பட்டது. 7:55க்கு கனியூர் சுங்கச்சாவடி வந்தபோது, 'புக்கிங்' நபர், பயணியருக்கு சீட்டு வழங்கி, அதன் வசூல் பணத்தை, டிரைவர் சக்திவேலிடம் மொத்தமாக வழங்கினார்.அவர், பணத்தை வாங்கியதும் உடனே கணக்கு பார்க்காமல், பாதுகாப்பற்ற முறையில் பஸ்சை ஓட்டியபடி வசூல் பணத்தை எண்ணினார்.இது வாட்ஸாப் உள்ளிட்ட குழுக்களில் பரவியது. இதனால், பணியில் அலட்சியம் காட்டிய டிரைவர் சக்தி வேல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை கோட்ட நிர்-வாக இயக்குனர் ஜோசப்டயஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை