மேலும் செய்திகள்
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
03-Sep-2024
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு உள்ளது. அங்கு சேலம், ராசிபுரம், ஆட்டையாம்பட்டி, மல்லுார், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள், நின்று செல்கின்றன.பயணியர், பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அவசரத்துக்கு பயன்படுத்த பொதுக்கழிப்பிடம் இல்லை. பஸ்சுக்கு காத்திருக்கும் மக்கள், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் பனமரத்துப்பட்டி பிரிவு பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்ட, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Sep-2024