உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மல்லுார் வரும் பஸ்கள்: கால அட்டவணை வைக்க வலியுறுத்தல்

மல்லுார் வரும் பஸ்கள்: கால அட்டவணை வைக்க வலியுறுத்தல்

பனமரத்துப்பட்டி: சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் மல்லுார் டவுன் பஞ்சாயத்து உள்ளது. சேலத்தில் இருந்து மல்லுார் வழியாக, ராசிபுரம், நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கே ஊருக்கு வெளியே நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின், பெரும்பாலான பஸ்கள் மல்லுார் ஊருக்குள் வந்து செல்வதில்லை.இது குறித்து, மல்லுார் பகுதி பஸ் பயணிகள் கூறியதாவது:சேலம் புதிய, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசிபுரம் செல்லும் தனியார் பஸ்கள், மல்லுார் ஊருக்குள் வருவதில்லை. அதே போல், நாமக்கல், கரூர் பஸ்கள் வருவதில்லை. எந்த பஸ் எப்போது வரும்; ஊருக்குள் வருமா, பைபாஸில் போகுமா என, சரியாக தெரிவதில்லை. பயணிகள் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர்.மல்லுார் ஊருக்குள் வந்து செல்ல வேண்டிய டவுன் பஸ், புறநகர் பஸ்களின் விபரம், அதன் கால அட்டவணை வைக்க வேண்டும். மல்லுாரில் நேரம் காப்பாளர் ஒருவரை நியமித்து, குறிப்பிட்ட பஸ்கள், குறித்த நேரத்தில், மல்லுார் வந்து செல்கிறதா என, கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ