மேலும் செய்திகள்
நன்கொடை புத்தகங்களை வழங்கும் பணி துவக்கம்
13-Nov-2024
சேலம்: சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, மாநகராட்சி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் (பபாசி )சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது.மொத்தம், 220 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகப்பிரியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் என தினமும் ஏராளமான பேர் வரு-கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால், இளம் வயதினர் மத்-தியில் புத்தக வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறது. புத்தகம் வாசிப்பின்மையால் மாணவர்களுக்கு பேச்சுத்திறன், கற்-பனைத்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தை பருவம் முதல், வாசிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, கடமை, நம் அனைவருக்குமே உண்டு. அதற்காகவே பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை புத்தகத் திருவிழாவுக்கு அவசியம் அழைத்து வர வேண்டும்.இங்குள்ள அரங்குகளில், சிறுவர்களை கவரும் புத்தகங்கள் அதிக-ளவில் இடம் பெற்றுள்ளன. டிச., 9 வரை தினமும் காலை, 10:00 மணிக்கு தொடங்கி, இரவு, 9:00 மணி வரை அரங்குகளை பார்-வையிடலாம். காலை, 10:30 முதல், மாலை, 5:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தப்படுவதுடன், ஆவணப்படமும் வெளியிடப்படுகின்றன.அனைவருக்கும் அனுமதி இலவசம். பள்ளி மாணவ,மாணவிய-ருக்கு புத்தக விற்பனையில் கூடுதல் தள்ளுபடி உண்டு.மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தினமும் பஸ்சில் இலவசமாக அழைத்து வரப்படுகின்றனர். அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி பெறலாம்.அனைத்தும் ஓரிடத்தில்நான், அரசுவேலை பெற படித்து வருகிறேன். போட்டித்தேர்வுக்கு தேவையான எல்லா புத்தகங்களும், புத்தக திருவிழாவில் கிடைக்கிறது. அதனால், ஒவ்வொரு புத்தகத்துக்கும் தனித்தனியாக அலைய வேண்டியதில்லை. அத்துடன் கதை, கட்-டுரை, நாவல், புதினம், சிறுகதை என அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது.- பாக்கியலட்சுமி, எட்டிகுட்டைமேடு.போட்டித்தேர்வு நுால்கள்தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் சார்பில், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள், நியாயமான விலையில், புத்தக திருவிழாவில் கிடைப்பதால் ரிஸ்க் கிடையாது. கடந்தமுறை நடந்த புத்தக திரு-விழாவிலும், போட்டித்தேர்வு புத்தகங்களை வாங்கினேன். இம்-முறையும் அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்-பட்டுள்ளது.-ஆனந்தன், தலைவாசல்.ஆன்மிக புத்தகத்தில் ஆர்வம்நான், மத்திய அரசுப்பணிக்காக படித்து வருகிறேன். என் வீட்டில், ஆன்மிக புத்தகங்களை அதிகம் விரும்பி படிப்பர். அதனால், ஆன்மிக புத்தகங்கள் வாங்க புத்தக திருவிழாவுக்கு வந்துள்ளேன். என் நண்பருக்கும் ஆன்மிக புத்தகத்தில் நாட்டம் அதிகம் என்-பதால், அவரும் புத்தகம் வாங்க என்னுடன் வந்துள்ளார்.- ஸ்ரீசரண், காரிப்பட்டி.கார்ட்டூன் புத்தகம்8 ம் வகுப்பு பயிலும் என் மகன் நித்யாதனுக்கு தேவையான ஓவியம், நிறைய கார்ட்டூன் புத்தகங்கள் வாங்கி உள்ளோம்.தவிர, இணையத்தில் படிக்கும் நல்ல கதை, புதினம், நாவல், ஆன்மிகம், சிறுகதை புத்தகங்களை தேர்வு செய்து, அதை புத்த-கத்திருவிழாவில் வாங்கி விடுவோம். முதலில், வாங்க வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்துவிட்டு, மறுநாள் குடும்பத்துடன் வந்து, தேவையான புத்தகங்களை வாங்-குவது வழக்கம்.அதேபோல, மூன்றாண்டாக வீட்டுக்கு தேவையான புத்தகங்-களை வாங்கி வருகிறோம்.- சத்யவாணி, கோரிமேடு.
13-Nov-2024