உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவில்களில் பாதுகாப்பு பணி முன்னாள் படை வீரருக்கு அழைப்பு

கோவில்களில் பாதுகாப்பு பணி முன்னாள் படை வீரருக்கு அழைப்பு

சேலம்: கோவில்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள முன்னாள் படை வீரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:சேலம், செவ்வாய்ப்பேட்டையில், 11 கோவில், சேலம் டவுனில், 9, அன்னதானப்பட்டியில், 3, சூரமங்கலம், உருக்காலை, காரிப்பட்டியில் தலா, 2, அஸ்தம்பட்டி, பள்ளப்பட்டி, கொண்டலாம்பட்டி, ஆட்டையாம்பட்டியில் தலா ஒன்று உள்பட, 37 கோவில்களில் பாதுகாப்பு பணி காலியாக உள்ளன. தற்போது சிறப்பு காவலராக பணிபுரியும் முன்னாள் படைவீரருக்கு, 7,900 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. அதனால் கோவில் பாதுகாப்பில் பணிபுரிய விருப்பமுள்ள, சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.கோவில்களின் பட்டியலை சரிபார்த்து விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும். வயது, 53 முதல், 62 வரை இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை