உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதி ஆசன வாயிலில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

கைதி ஆசன வாயிலில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

சேலம், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, தமானிகோம்பையை சேர்ந்தவர் மணிகண்டன், 35. இவர் திருட்டு வழக்கில், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம், சேலம் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட அவர், பின் மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். நுழைவாயிலில், மெட்டல் டிடெக்டர் வழியே அவரை அனுப்பியபோது, சத்தம் வந்தது. உடனே போலீசார் விசாரித்தனர். பின் ஆசனவாயிலில் ஏதோ உள்ளது என்பதை உணர்ந்த போலீசார், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு இனிமா கொடுத்த பின், ஆசனவாயில் மூலம், 3 உருண்டைகள் வந்தன. அதை திறந்து பார்த்தபோது, 45 கிராம் கஞ்சா, 'பட்டன்' மொபைல் போன் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் நண்பர்கள் கொடுத்திருக்கலாம் என, போலீசார் கருதினர். தொடர்ந்து ஜெயிலர் ராஜேந்திரன், நேற்று அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை