ரூ.15 லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு
சேலம்:கேரள மாநிலம் பாலக்காடு, கள்ளிக்காட்டை சேர்ந்தவர் ராணி, 61. இவர் சில நாட்களுக்கு முன் சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் ஏஜன்சியை, சேலம் பட்டைக்கோவிலில், மகாலட்சுமி, சிந்து உள்ளிட்ட சிலர் நடத்தினர். அவர்கள் விளம்பரம் செய்திருந்ததை பார்த்து, 2019ல், 15 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அவர்கள் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து விசாரித்த போலீசார், கோவையை சேர்ந்த மகாலட்சுமி, சிந்து, கவுசல்யா, ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.