உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மோசடியாக நிலம் விற்ற பெண் உள்பட 9 பேர் மீது வழக்கு

மோசடியாக நிலம் விற்ற பெண் உள்பட 9 பேர் மீது வழக்கு

சேலம், சேலம், டி.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் தனம், 65. இவர் கடந்த, 14ல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:என் தந்தை பெருமாள் பெயரில், வளையக்காரனுாரில் கிணற்றுடன் கூடிய, 7.81 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 1998ல் பெருமாள் இறந்தபின், அவரது மனைவி ராமாயி, மகன் ராஜசேகரன், தனம் மட்டுமே வாரிசுகள். இதற்கு சான்றிதழ், 2001ல் பெற்றுள்ளோம். 2019ல் என் சகோதரன் ராஜசேகரன் இறந்துவிட்டார்.அவரது இரு மனைவிகளான சின்னம்மாள், கனகலட்சுமி, மகன்கள் கோபிநாத், சுந்தர மணிகண்டன் ஆகியோருக்கு, வாரிசு சான்று தொடர்பாக 2020ல் கோபிநாத் ஆட்சேபனை தெரிவித்தார். இதன் விசாரணை நிலுவையில் உள்ளது.இந்நிலையில் கனகலட்சுமி, சுந்தர மணிகண்டன், 7.81 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பெருமாளின் வாரிசாகிய என்னையும், ராஜசேகரனின் மற்றொரு மனைவி சின்னம்மாள், அவரது மகன் கோபிநாத்தை மறைத்து, போலியாக வாரிசு சான்றிதழ் தயாரித்து, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த ஜெயராமன், மாட்டுக்காரனுார், செக்கரப்பட்டியை சேர்ந்த சண்முகம் ஆகியோருக்கு கிரயம் செய்துள்ளனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதுகுறித்து சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கனகலட்சுமி, சுந்தர மணிகண்டன் உள்பட, 9 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ