ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்க நுாற்றாண்டு விழா
சேலம்: சேலத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் நுாற்றாண்டு விழாவில், அகில இந்திய இணை தொடர்பு பொறுப்பாளர் ஆதர்னியா சுனில் தேஷ்பாண்டே கலந்து கொண்டார்.சேலம், மரவனேரி மாதவம் மண்டபத்தில் நேற்று ராஷ்ட்ரீயா ஸ்வயம் சேவக சங்கத்தின் நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழா, சேலம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின், அகில இந்திய இணை தொடர்பு பொறுப்பாளர் ஆதர்னியா சுனில் தேஷ்பாண்டே பங்கேற்று, 'ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள், சேவைகள், தியாகம் ஆகியவற்றை எடுத்து கூறி, சங்கத்தில் இணைத்து கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்' என தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாநில மக்கள் இணை செயலாளர் ஆடிட்டர் பாஸ்கர், தேசிய சேவா சமிதி தலைவர் ஹரிஹர கோபாலன், ஸ்ரீ பரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.