உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இருள் சூழ்ந்த சாலையால் வழிப்பறிக்கு வாய்ப்பு

இருள் சூழ்ந்த சாலையால் வழிப்பறிக்கு வாய்ப்பு

இருள் சூழ்ந்த சாலையால் வழிப்பறிக்கு வாய்ப்புபனமரத்துப்பட்டி, அக். 5-சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு சாலை உள்ளது. அங்கு நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் போக்குவரத்து உள்ளது. பாலத்தின் கிழக்கு பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு உள்ளது. இரவில் விளக்கு வெளிச்சம், பாலத்தின் கிழக்கு பகுதி மற்றும் நெடுஞ்சாலையில் தெரிகிறது. பாலத்தின் அடியிலும், மேற்கு பகுதியிலும் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்துள்ளது. கிழக்கு பகுதியில் இருந்து பாலத்தின் அடியில் புகுந்து மேற்கு பகுதிக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இருளில் தடுமாறுகின்றனர். ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி செல்லும் டவுன் பஸ்கள், பாலத்தின் மேற்கு பகுதியில் இருளில் நிறுத்தி, பயணியரை இறக்கி விடுகின்றனர். வழிப்பறி, விபத்து அபாயம் உள்ளதால், மேற்கு பகுதியில் மின் விளக்கு பொருத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ