மேலும் செய்திகள்
மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
12-Jun-2025
வாழப்பாடி, வாழப்பாடி, சிங்கிபுரம் நாடார் தெருவில் உள்ள பெருமாள், மாரியம்மன் கோவில்களுக்கு தேர்கள் அமைக்கும் பணி சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது அப்பணி முடிந்ததால், வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது.காலை, 8:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள் தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் கேரள செண்டை மேளம் முழங்க, ஏராளமான பெண்கள், முக்கிய வீதிகள் வழியே தேரை இழுத்துச்சென்று, மீண்டும் கோவிலில் நிலை நிறுத்தினர்.தொடர்ந்து மாரியம்மன் தேருக்கு பூஜை செய்து, கலசம் திருரதம் ஏற்றி, தேர் நிலை பெயர்த்தல் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பின் தேர் வெள்ளோட்டமாக, முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து, மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
12-Jun-2025