குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை
சேலம்:கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் நேற்று நள்ளிரவு, 11:50 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i1fqo8si&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏராளமான கிறிஸ்த-வர்கள், கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடி பிரார்த்தனை செய்-தனர். சரியாக, 12:00 மணிக்கு பேராலய வளாகத்தில் அமைக்கப்-பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் இருந்து, குழந்தை இயேசு சொரூபத்தை ஆயர்கள் சுமந்து வந்து, கூடியிருந்தவர்களுக்கு காட்டி கிறிஸ்து பிறப்பை உலகுக்கு தெரிவித்தனர். அதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்து-நாதர், அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ., இம்மானுவேல் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் நடந்த நள்ளிரவு பிரார்த்த-னையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சங்ககிரி புனித அந்தோ-ணியார், சி.எஸ்.ஐ., உள்ளிட்ட ஆலயங்களில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.