உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுருட்டு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சுருட்டு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

கெங்கவல்லி:தமிழ்நாடு சுருட்டு தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. குழு நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார்.அப்போது சுருட்டு சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலா-ளர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் பட்டதாரி குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சி.ஐ.டி.யு., செயலர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை