கோவை - மதார் சிறப்பு ரயில் அறிவிப்பு
சேலம்,கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் மதார் ரயில்வே ஸ்டேஷன் வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை - மதார் சிறப்பு வார ரயில், நவ., 13 முதல், டிச., 4 வரை, வியாழன்தோறும் அதிகாலை, 2:30க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா வழியே சனி காலை, 11:20க்கு மதாரை அடையும். வியாழன் அதிகாலை, 4:05க்கு ஈரோடு, 5:10க்கு சேலம் வந்து செல்லும். மறுமார்க்க ரயில், நவ., 16 முதல், டிச., 7 வரை, ஞாயிறுதோறும் இரவு, 11:50க்கு கிளம்பி, புதன் காலை, 8:30க்கு கோவையை அடையும். புதன் அதிகாலை, 3:50க்கு சேலம், 4:50க்கு ஈரோடு வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.