உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வைகாசி தேர் திருவிழா நடத்த காளையுடன் சென்று வரி வசூல்

வைகாசி தேர் திருவிழா நடத்த காளையுடன் சென்று வரி வசூல்

வாழப்பாடி, வாழப்பாடி, அக்ர ஹாரத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் வைகாசி தேர் திருவிழா, வரும் ஜூன், 7ல் நடக்க உள்ளது. இதனால் நேற்று, 'தண்டலுக்கு மாடு படைத்தல்' நிகழ்ச்சி நடந்தது. அதன்படி தேர் திருவிழா குறித்து தண்டோரா போட்டு, அழைப்பிதழ் வழங்கி மக்களுக்கு அறிவிக்கவும், திருவிழா நடத்தும் செலவுக்கு நன்கொடை வசூலிக்கவும், கோவில் காளையை அலங்கரித்த விழா குழுவினர், குடியிருப்பு பகுதிகளுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, பாரம்பரிய முறைப்படி வரி வசூல் செய்தனர். அப்போது காளைக்கு, பழங்கள், தீவனம், பிரசாதம் கொடுத்து மக்கள் வழிபட்டு, திருவிழாவுக்கு நன்கொடை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !