மேட்டூர் நகராட்சி குடிநீர் வினியோகம் துாய்மை பணிகளை கலெக்டர் ஆய்வு
மேட்டூர்மேட்டூர் நகராட்சியில், நேற்று பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம், துாய்மை பணிகள், அரசு பள்ளி காலை உணவு திட்டம் குறித்து, நேற்று காலை சேலம் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.முதல்வரின், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், மேட்டூர் வட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக ஆய்வு துவங்கியது. எம்.காளிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, பாலின் அளவு குறித்தும் விவசாயிகளுக்கு பால் தொகை முழுமையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறியப்பட்டது.தொடர்ந்து எம்.காளிப்பட்டி அரசு துவக்கபள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்க தரமான உணவு பொருட்கள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது.பின்பு மேட்டூர் நகராட்சியில் வீடுகளுக்கு சென்று, மக்களிடம் குடிநீர் வினியோகம், துாய்மை பணிகள் குறித்து கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பின்பு கலெக்டர் பிருந்தாதேவி, இரு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பெற்ற மனுக்கள் மற்றும் கள ஆய்வு அறிக்கையை உடனடியாக வழங்க அறிவுறுத்தினார்.ஆய்வின் போது மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், தாசில்தார் ரமேஷ், நகராட்சி ஆணையர் நித்யா, உதவி பொறியாளர் மலர் மற்றும் வருவாய் துறை, நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.