உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இருள் சூழ்ந்த நெடுஞ்சாலையால் தடுமாற்றம்

இருள் சூழ்ந்த நெடுஞ்சாலையால் தடுமாற்றம்

பனமரத்துப்பட்டி, நவ. 1-சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை யில் சீலநாயக்கன்பட்டி முதல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, பிரதான சாலை நடுவே ஏராளமான மின் விளக்கு கம்பங்கள் உள்ளன. அதில் தாசநாயக்கன்பட்டி முதல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, ஒருமாதமாக மின் விளக்கு எரியவில்லை. பிரதான சாலை இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையோரம், மின் விளக்கு கம்பம் இல்லை. ஓரிரு இடத்தில் கம்பங்கள் இருந்தாலும் விளக்குகள் எரியவில்லை. இருள் சூழ்ந்த சர்வீஸ் சாலையை, இரு வழிப்பாதையாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இரவில் தடுமாற்றம் அடைகின்றனர். தெரு விளக்கை எரியவிட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை