2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சியில் துாய்மைப்பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில், 70 பேர் உள்ளனர். அவர்கள், சென்னையை சேர்ந்த, 'ெஹல்த் கேர் டெக்னாலஜி' ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அதன் பணியாளர்கள், கடந்த ஜூலையில் நிலுவை சம்பளம், உயர்த்தப்பட்ட சம்பளம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது தினமும் வழங்கப்படும், 308 ரூபாயை, 370 ரூபாயாக உயர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் நேற்று காலை, 7:00 மணி முதல், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், பணியை புறக்கணித்து நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்தப்படி, 370 ரூபாய், இரு மாத நிலுவை சம்பளம் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். நகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பின் மாலை, ௫:00 மணிக்கு அவர்களாகவே கலைந்து சென்றனர்.