ஆயுள் தண்டனை வழங்கிய கோர்ட் நிதி நிறுவன ஓனருக்கு நெஞ்சு வலி
சேலம், சிறுமியை சீண்டிய வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில், நிதி நிறுவன உரிமையாளருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.சேலம், கிச்சிப்பாளையம், ராஜாபிள்ளை காட்டை சேர்ந்தவர் சிவகுமார், 44. இவர், 17 வயது சிறுமிக்கு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கினார். நேற்று முன்தினம், அவருக்கு, ஆயுள் தண்டனை வழங்கி, போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை சிறையில் அடைக்கும் முன், சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு, போலீசார் அழைத்துச்சென்றனர். அப்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக, சிவகுமார் தெரிவித்தார். இதனால், அவரை அங்கேயே அனுமதித்து, போலீஸ் பாதுகாப்புடன், சிகிச்சை அளிக்கப்படுகிறது.