வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாடு என்றால் வீட்டில் கட்டி வளக்கணும் ரோட்ல மேய விட்டா இந்த கதி தான் பாவம் பசு
மேலும் செய்திகள்
'பாயும்' புலியான ஆபீசர் 'பதுங்குவது' ஏனோ...
11-Mar-2025
சேலம்:தெரு நாய்கள் கடித்ததில் பசு மாடு பரிதாபமாக பலியானது.சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, குப்தா நகரை சேர்ந்தவர் மீனா, 55. இவர், 6 பசு மாடுகளை பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஒரு பசுமாட்டை நாய்கள் கடித்து குதறின. இதில், கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டு பசு இறந்து கிடந்தது. கால்நடைத்துறை அலுவலர்கள் விசாரித்தனர்.மீனா கூறுகையில், ''மாடுகளை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். இப்பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பலமுறை பசுவை கடிக்க வரும் நாய்களை விரட்டியுள்ளேன். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மாடு என்றால் வீட்டில் கட்டி வளக்கணும் ரோட்ல மேய விட்டா இந்த கதி தான் பாவம் பசு
11-Mar-2025