மேலும் செய்திகள்
வாடிக்கையாளர் பெயருடன் அஞ்சல் துறை காசோலை
16-May-2026
சேலம்; அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்க-ளுக்கு தனிப்பயன் காசோலை புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் அறிக்கை:அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்க-ளுக்கு, புது தனிப்பயன் காசோலை புத்தக வசதி, கடந்த, 8ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கணக்குதாரரின் பெயர், கணக்கு எண், அஞ்சல் துறையின் ஐ.எப்.எஸ்.சி., குறியீடு முன்கூட்டியே அச்சிடப்-பட்டிருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்ப-தோடு வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரத்தில் சேவை கிடைக்கும்.வாடிக்கையாளர்கள் விருப்பப்படி உடனடி காசோலை புத்தகம் மற்றும் தனிப்பயன் காசோலை புத்தகம் ஆகிய ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.தனிப்பயன் காசோலை புத்தகம், இலவசமாக கணக்குதாரரின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.இச்சேவையை அஞ்சலகத்தில் நேரடியாக விண்-ணப்பித்து பெறலாம். விபரங்களுக்கு அருகே உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம்.
16-May-2026