மேலும் செய்திகள்
கூட்டுறவு கடனுதவிகளை பயன்படுத்த அழைப்பு
28-Aug-2025
சேலம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டை, வங்கி கடனுதவி வழங்கும் விழா, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி மைதானத்தில், வரும், 16 காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. துணை முதல்வர் உதயநிதி, அடையாள அட்டை, கடனுதவி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின் வீடியோ கான்பரன்ஸ் மூலம், இதர மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேச உள்ளார். இதில் சேலம் மாவட்டத்தில், 5,000க்கும் மேற்பட்ட மகளிர் குழு பயனாளிகள் பயன் பெற உள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும், 15 இரவு, துணை முதல்வர், சேலம் வர உள்ளார்.
28-Aug-2025