மேலும் செய்திகள்
தவறாக பயன்படுத்தப்படும் குண்டர் சட்டம்: சீமான்
07-Sep-2025
கெங்கவல்லி :செந்தாரப்பட்டி மற்றும் நாகியம்பட்டியில் உள்ள, இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களது விபரம் குறித்த தகவல்கள், ஆன்லைனில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டியில், வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு இலங்கை தமிழர் முகாம்கள் உள்ளன. 85 குடும்பங்களை சேர்ந்த, 260 பேர் உள்ளனர். முகாமில் வசிக்கும் நபர்களின் தகவல்கள், மறுவாழ்வுத்துறை சார்பில், இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் நேற்று துவங்கின.அப்போது, இலங்கை தமிழர் முகாம் ஆர்.ஐ., ஜெயசித்ரா மேற்பார்வையில், செந்தாரப்பட்டி இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்களது தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. முகாமை சேர்ந்தவர்கள், தங்களது முழு தகவல்களையும் தெரிவித்து பதிவு செய்து கொண்டனர். அதேபோல், நாகியம்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களது தகவல் குறித்தும் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
07-Sep-2025